செய்திகள்

சிவ்நராயண் சந்தர்போலிற்கு இடமளிப்பதில்லை என்ற முடிவிற்கு ஹோல்டிங் ஆதரவு

மேற்கிந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் சிவ்நாரயண் சந்தர்ப்போலிற்கு ஆஸி அணியுடனான டெஸ்ட்போட்டிகளில் இடமளிப்பதில்லை என்ற தெரிவுக்குழுவின் முடிவு கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ள அதேவேளை முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மைக்கல் ஹோல்டிங் அதனை நியாயப்படுத்தியுள்ளார்.
தான் இன்னமும் அணியில் இடம்பெற தகுதியானவன் என்பதை சந்தர்போல் சமீபத்திய டெஸ்ட் தொடர்களில் நிரூபிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரு தசாப்தங்களாக அவர் மேற்கிந்திய அணிக்கு மிகப்பெரும் சேவையாற்றியுள்ளார்,இவ்வளவு நீண்ட காலத்திற்கு அவர் ஆடியது குறித்து மேற்கிந்திய அணி மகிழ்ச்சியடையவேண்டும்,நல்ல விடயங்கள் அனைத்தும் முடிவிற்கு என்றோ ஓரு நாள் முடிவிற்கு வந்தாகவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தென்னாபிரிக்காவிற்கு எதிராக அவர் விளையாடிய விதத்தை பார்த்தபோது அவர் பழைய சந்தர்போல் போல தோன்றவில்லை,வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினார் அதனால் ஆஸிக்கு எதிராக அவரால் விளையாடுவது கடினமாக இருக்கும்.
மேலும் அவர் இளைய வீரர் ஒருவரிற்கு வழிவிடவேண்டும்,இளைய வீரர் ஓருவர் உடனடியாக சந்தர்போலின் இடத்தை நிரப்பபோவதில்லை,
சந்தர்போல் தானாக முன்வந்து ஓய்வுபெறப்போவதில்லை, இதனால் தெரிவுக்குழுவின் முடிவு சரியானது என அவர் குறிப்பிட்டுள்ளார்