செய்திகள்

சீக்கிரமா என்னை சாகடிக்காதீங்க ப்ளீஸ்! கெஞ்சுகிறார் பிந்து மாதவி

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க அளவு படங்களில் நடித்தவர் பிந்து மாதவி.

இவர், வெப்பம், கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தேசிங்குராஜா, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது தமிழில் ‘கலக்குற மாப்ளே’, ‘சவாலே சமாளி’ என ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பிந்து மாதவி விபத்து ஒன்றில் சிக்கி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக என்கிற செய்தி காட்டுத்தீ போல் சினிமா வட்டாரத்தில் பரவியது. இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த அனைவரும் அவரை நலம் விசாரிக்க தொடர்பு கொண்டுள்ளனர்.

மேலும் அவருடைய முகநூல் பக்கத்தில், ரசிகர்கள் அனைவரும் “விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்” (Get Well Soon) என பதிவு செய்து வந்தனர். இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த நடிகை பிந்து மாதவி, இந்த செய்தி வெறும் புரளிதான் என தெளிவு படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “ஐயா சாமிகளா.. நான் நல்லாத்தான் இருக்கேன். இங்க சென்னைல தான் இருக்கேன். இன்னும் உசிரோடதான் இருக்கேன். அவ்வளவு சீக்கிரமா என்னை சாகடிக்காதீங்க ப்ளீஸ்..” என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.