செய்திகள்

சீனாவின் ஆதரவுடனான துறைமுகத் திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்: அரசு முடிவு

சீனாவின் ஆதரவுடன் இலங்கையின் தலைநகர் கொழும்பில் மேற்கொள்ளப்படும் துறைமுக நகரத் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரட்ண தெரிவித்தார்.

துறைமுக நகரத் திட்டம் தொடர்பான விரிவான ஆய்வுகளை மேற்கொண்ட பின்னரே இதனைத் தொடர்ந்தும் முன்னெடுப்பது என இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.