செய்திகள்

சீனாவின் “லான் மார்ச் – 5பி” ரொக்கட் பாகங்கள் கடலில் விழுந்தது

விண்வெளியில் கட்டுப்பாட்டை இழந்த சீனாவின் “லான் மார்ச் – 5பி” ரொக்கட்டின் பாகங்கள் இந்து சமுத்திரத்தில் விழுந்துள்ளன.

இந்தியாவுக்கு தென்மேற்கே இந்து சமுத்திரத்தில் அதன் பாகங்கள் விழுந்துள்ளதாக சீனாவின் விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

21 டொன் எடை கொண்ட அந்த ரொக்கட் விண்ணுக்கு அனுப்பப்பட்டு சிறிது காலத்தில் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

இந்நிலையில் அது பூமியில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் விழலாம் என்று கூறப்பட்டு வந்ததுடன், அது தொடர்பாக மக்களிடையே அச்சமும் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை அது கடலில் விழுந்துள்ளதாகவும், அதற்கு முன்னர் அதன் பெரும்பாலான பகுதிகள் பூமியின் வளிமண்டலப் பகுதிக்குள் நுழையும் போதே எரிந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
-(3)