செய்திகள்

சீனாவுடன் உறவுகளை முறித்துக்கொண்ட பின்னர் அந்த நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளும் சிறிசேன

புதன்கிழை ஆரம்பமாகும் தனது சீனா விஜயத்தின் போது அந்த நாட்டின் உணர்வுகளை புண்படுத்த சிறிசேனமுயலமாட்டார் மாறாக அந்த நாட்டிடமிருந்து ஒரு வகையான விவகாரத்தை பெற முயல்வார் என நிபுணர்களை மேற்கொள் காட்டி ஏஎவ்பி செய்திச்சேவை தெரிவித்துள்ளது.

சீனா உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களை இடைநிறுத்தி, இ;ந்தியாவுடனான உறவுகளை பலப்படுத்தியதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள உறவுகளை சரிசெய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாரம் சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

article-doc-1a64z-6XEZ92DNkHSK2-883_634x420

ஜனவரியில் இடம்பெற்ற தேர்தல் மூலமாக ஆட்சிக்கு வந்த சிறிசேன,இந்தியாவிற்கு எரிச்சலை ஏற்படுத்திய மகிந்தராஜபக்ச அரசாங்கத்தின் சீனாவுடனான நெருக்கத்திற்கு முடிவு கண்டுள்ளார்.

ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் தந்திரோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடத்தில் உள்ள இலங்கையில் அதிகளவு முதலீடுகளை மேற்கொள்ளும் நாடாக மாறியிருந்த சீனா தனது அரசியல் மற்றும் இராணுவ செல்வாக்கையும் அதிகரித்திருந்தது.சிறிசேனா இந்த செல்வாக்கை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

இந்தியா தனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என கருதிய போர்ட்சிட்டி திட்டத்தை இடைநிறுத்தியுள்ள சிறிசேன அரசாங்கம், சீனாவின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட ஏனைய உட்கட்டமைப்பு திட்டங்களில் இடம்பெற்றுள்ள ஊழல் குறித்து ஆராய்ந்து வருகின்றது.

புதன்கிழை ஆரம்பமாகும் தனது சீனா விஜயத்தின் போது அந்த நாட்டின் உணர்வுகளை புண்படுத்த சிறிசேனமுயலமாட்டார் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.அவர் சீனாவிடமிருந்து ஓருவகை விவகாரத்தை பெற முயல்வார் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

சிறிசேன சீனா ஜனாதிபதியுடனும் ஏனைய முக்கிய அதிகாரிகளுடனும் பேச்சவார்த்தைகளை மேற்கொள்வார் என கொழும்பில் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். முன்னைய அரசாங்கம் சீனா இலங்கையில் தான் நினைத்தபடி செயற்படுவதற்கு அனுமதித்தது என சுட்டிக்காட்டும் ஊடகவியலாளர் விக்டர் ஐவன்,இந்தியாவிற்கு எரிச்சல் ஏற்படுத்தாத ஒரு சாதாரண உறவையே சீனாவுடன் ஏற்படுத்துவதற்கு சிறிசேன விரும்புகின்றார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆசியாவின் இரு போட்டியாளர்களுடனான உறவில் சமநிலையை பேணுவதே இந்த விஜயத்தின் நோக்கம் என தெரிவிக்கின்றார் புதுடில்லியின் ஜவஹர்லால்நெரு பல்கலைக்கழக போராசிரியர் சகாதேவன்.

மாற்றமடையும் செல்வாக்கு

article-doc-1a64z-6XEZ9KrR9HSK2-937_634x422

ஜனவரியில் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பின்னர் சிறிசேன சீனாவிற்கு பதில் இந்தியாவிற்கே தனது முதலாலது வெளிநாட்டுப்பயணத்தை மேற்கொண்டார்.இலங்கையில் சீனாவின் செல்வாக்கு காரணமாக இந்தியாவுடனான உறவுகளில் ஏற்பட்ட பதட்டத்தை குறைப்பதே இதன் நோக்கம்.

கடந்த வருடம் ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் சீனாவின் நீர்மூழ்கிகள் இலங்ககைக்கு வருவதற்கு அனுமதிக்கப்பட்டமை குறித்து புதுடில்லி கடும் கோபம்கொண்டிருந்தது.

இந்து சமுத்திரத்தில் இந்தியாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்தவும்,தனது பொருhளாதார நலன்களை பாதுகாக்கவும் சீனா அப்பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளில் தனது செல்வாக்கை அதிகரிப்பதற்கும்,துறைமுகங்களை ஏற்படுத்துவதற்கும் திட்டமிட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த செல்வாக்கை குறைப்பதற்காகவும், இந்து சமுத்திரபிராந்தியத்தில் இந்தியாவிற்குள்ள பாராம்பரியமான செல்வாக்கை உறுதிசெய்வதற்காகவும் இந்தியபிரதமர் மோடி சில வாரங்களுக்கு முன்னர் சுற்றுப்பயணமொன்றை மேற்கொண்டார்.

சிறிசேன பதவிக்கு வந்த பின்னர் சீனாவிற்கு விஜயம்மேற்கொண்டிருந்த மங்கள சமரவீர எதிர்காலத்தில் சீனா நீர்மூழ்கிகள் எவற்றிற்கும் இலங்கையில் இடமளிக்கப்பபோவதில்லை என தெரிவித்திருந்தார். இலங்கைக்கு சீனா உயர்ந்த வட்டியுடன் வழங்கிய கடன்கள் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவும் கொழும்பு விரும்புகின்றது. என ஏஎப்.பி குறிப்பிட்டுள்ளது.

 தமிழ்வடிவம்- சமகளம்