செய்திகள்

சீன நிலக்கரி சுரங்கத்தில் 9 பேர் சிக்கி தவிப்பு: மீட்கும் முயற்சிகள் தீவிரம்

சீனாவில் உரிமம் இல்லாத நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் 9 பேரை உயிருடன் மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நேற்று அந்நாட்டின் யாங்டிங் மாவட்டத்திற்குட்பட்ட வெங்டாங் கிராமத்தில் உள்ள உரிமம் இல்லாத நிலக்கரி சுரங்கத்தின் நுழைவு வாயிலை உடைத்த 12 பேர் கும்பல் சுரங்கத்துக்குள் சென்று நிலக்கரியை வெட்டி எடுக்க முயன்றுள்ளது. இந்நிலையில் அங்கு திடீரென ஏற்பட்ட விபத்தில் 9 பேர் சிக்கிக்கொள்ள 3 பேர் மட்டும் தப்பி மேலே வந்துள்ளனர். இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக அங்கு விரைந்து சென்ற போலீசார் 9 பேரை உயிருடன் மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும் விபத்திற்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை.