செய்திகள்

சீரற்ற காலநிலையால் மண்மேடு சரிந்து விழுந்ததில் 35 பேர் பாதிப்பு

நல்லதண்ணி – லக்ஷபான தோட்டம் எமில்டன் பிரிவில் மண்மேடு சரிந்து விழுந்ததில் நான்கு வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று பிற்பகல் பெய்த கடும் மழையினாலேயே இவ்வாறு வீடுகள் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிகமாக தோட்ட ஆலய மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது மலையகத்தில் பிற்பகல் வேளையில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடதக்கது.