செய்திகள்

சீரற்ற காலநிலையால் வாகன விபத்துகள் அதிகரிப்பு

மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வாகன விபத்துகள் அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சீரற்ற காலநிலை காரணமாக பனிமூட்டமும் அதிகரித்து காணப்படுவதாகவும் வீதி வழுக்கல் தன்மையுடன் காணப்படுவதன் காரணமாகவும் வாகனங்களை வேகமாக செலுத்துவதனால் இந்த விபத்துகள் அதிகரிக்கின்றதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

அந்தவகையில் அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை புகையிரத கடவைக்கு அருகாமையில் வேன் ஒன்றுடன் முச்சக்கரவண்டி ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியதில் முச்சக்கரவண்டியில் பயணித்த இரண்டு பேர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை அட்டனிலிருந்து சாமிமலை சென்ற லொறி ஒன்று சாமிமலை ஸ்டொக்கம் பகுதியில் வைத்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

எனினும் இதன்போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் வாகன சாரதிகளை மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

accident (5)