செய்திகள்

சீரற்ற காலநிலையால் 7 மாவட்டங்களில் 2750 குடும்பங்கள் பாதிப்பு: 3 பேர் பலி!

நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலையின் காரணமாக மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தங்களில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அத்துடன் காலி, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை உள்ளிட்ட 7 மாவட்டங்களை சேர்ந்த 2,750 குடும்பங்களின் 11,542 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை தொடர்ந்தும் மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதால் அனர்த்தங்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையினர் உதவிகளை வழங்கி வருகின்றனர்.
-(3)