செய்திகள்

சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாது தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாது தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.பொதுமக்கள் அரசாங்கத்தின் தீர்மானங்களை ஏற்றுக்கொண்டு, வழங்கப்படும் அறிவுறுத்தல்களை ஏற்று அதற்கேற்ப நடந்துகொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.அத்துடன் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைவாக எதிர்வரும் முதலாம் திகதி வரை நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.(15)