செய்திகள்

சுசிலின் அறிக்கை உத்தியோகபூர்வமானதா?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் வேட்பு மனு வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணங்கியுள்ளதாக தெரிவித்து சுசில் பிரேமஜயந்தவினால்  வெளியிடப்பட்ட அறிக்கை அரசியல்வாதிகளுக்கிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுசில் பிரேமஜயந்தவினால் மாத்திரமே குறித்த அறிக்கை வெளியிடப்பட்ட போதும் கூட்டமைப்பின் தலைவரான ஜனாதிபதியினால் அது தொடர்பாக இது வரை அறிக்கையெதுவும் வெளியிடப்படாமையினால் அந்த தகவல் உத்தியோகபூர்வமானதா என்ற சந்தேகம் அரசியல்வாதிகளுக்கிடையே தற்போது ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி அப்படி தீர்மானித்திருந்தால் அவர் உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிட்டிருப்பார் எனவும். அவர் தீர்மானிக்காமையினால் தான் பொறுமையாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடும் போது மஹிந்துவுக்கு வேட்பு மனு இல்லையென கூறலாம் என தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் அப்படி அறிவிப்பு விடுக்கப்பட்டால் உடனடியாக தனியான அணியொன்றை அமைத்து களமிறங்குவதற்கு மஹிந்த அணியினர் சகலதையும் தயார்படுத்தியே வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.