செய்திகள்

சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியிலிருந்து கருணா நீக்கம்

சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியிலிருந்து கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் நீக்கப்பட்டுள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியகுழுவின் கூட்டம் பத்தரமுல்லையில் இடம்பெற்ற போதே கட்சியின் பிரதித் தலைவர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.

2009 ஏப்ரல் மாதம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவினால் கட்சியின் பிரதித் தலைவராக கருணா நியமிக்கப்பட்டார். கடந்த பொதுத் தேர்தலில் தேசியப் பட்டியல் மூலம் அவர் பாளுமன்ற உறுப்பினராகவும் அவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுக்கு நெருக்கமானவர் எனக்கருதப்படும் டள்ளஸ் அழகப்பெரும பொருளாளர் பதவியிலிருந்தும், பசில் ராஷபக்‌ஷ தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்தும் இன்று நீக்கப்பட்டனர் என்பதும் கவனிக்கத்தக்கது.