செய்திகள்

சுதந்திரமான நீதீயான தேர்தலை நடத்த கெரி மகிந்த ராஜபக்சவிடம் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி தேர்தல் நீதீயானதாகவும், சுதந்திரமானதாகவும் நடைபெறுவதை உறுதிசெய்யுமாறு அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஜோன் கெரி இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட கெரி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதாக அமெரிக்க வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் சுதந்திரமான,நீதீயான,நம்பகத்தன்மை மிக்க , அமைதியான, அனைத்துசமூகத்தினரும் வாக்களிக்க கூடிய தேர்தல் நடைபெறுவதற்கு அமெரிக்கா ஆதரவளிக்கின்றது என அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இலங்கை ஜனாதிபதியை தொலைபேசியில் தொடர்புகொண்ட கெரி,தேர்தல்கள் வன்முறை மற்றும் அச்சுறுத்தல்கள் அற்றதாகவும்அமைவதையும்,வாக்குகள் எண்ணப்படுவது நம்பகத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் அமைவதையும் உறுதிப்படுத்துவதில் அரசாங்கத்திற்குள்ள பொறுப்பை வலியுறுத்தினார் என வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் ஜோன் ஸகிதெரிவித்துள்ளார்.
அமெரிக்கா இலங்கை நிலவரத்தை தொடர்ந்தும் உன்னிப்பாக அவதானிக்கும்,வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்வதையும், சர்வதே மற்றம் உள்நாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் தேர்தல்கள் எண்ணப்படும் நிலையங்களுக்கு செல்வதையும் உறுதிசெய்யுமாறும் சகல தரப்பினரிடமும் வேண்டுகோள்விடுக்கும்,
தேர்தல் வன்முறைகள் குறித்த தகவல்காளால் கவலையடைந்துள்ள அமெரிக்கா அது குறித்து நம்பகத்தன்மை மிக்க விசாரணைகளை முன்னெடுக்குமாறும் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றது என ஸகி தெரிவித்துள்ளார்.