செய்திகள்

சுதீப் – பாவனா நடிப்பில் ” முரட்டு கைதி “

கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப் நடித்து கர்நாடகாவில் வெளியாகி அமோக வெற்றிபெற்ற படம் “ பச்சன் “. இந்தப் படமானது சென்ற வருடம் கர்நாடகாவில் அதிக வசூலான படம் என்ற பெருமையைப் பெற்றது.  இப்போது பச்சன் படத்தை தமிழில் ‘முரட்டு கைதி’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிட உள்ளனர்.

‘நான் ஈ’ படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த சுதீப், இந்தப் படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கக்படுகிறது. இந்தப் படத்தில் பாவனா கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் நாசர், ஜெகபதிபாபு, பிரதீப்ராவத், ரவிசங்கர், ஆசிஷ்வித்யார்த்தி, பாருல்யாதவ் ஆகியோர் நடிக்கிறார்கள்.எழுதி இயக்கியுள்ளவர்  ஷஷாங்க்.