செய்திகள்

சுனாமியில் வீடமைப்பில் நிதி மோசடி ராடா நிறுவன பிரதானியொருவர் கைது

சுனாமி அனர்த்தத்தின் பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுக்கவென கடந்த அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட ராடா எனும் நிறுவனத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பாக அந்த நிறுவனத்தன் செயற்பாட்டு அதிகாரியாக பணியாற்றிய சாலிய விக்கிரமசூரிய பொலிஸ் விசேட பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
2006ம் ஆண்டு காலத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த நிறுவனத்தில் 16.9 கோடி ரூபா ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் அது தொடர்பாக விசாரணை நடத்தும் வகையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.