செய்திகள்

சுன்னாகம் எண்ணெய்க் கசிவு பாரிய அச்சுறுத்தல்: யாழ்.மருத்துவ பீட பீடாதிபதி

வலி வடக்கு பகுதிகளில் நீரில் ஏற்படும் எண்ணெய் கசிவு காரணமாக பாரதூரமான நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக யாழ்.பல்கலைக்கழ மருத்துவ பீட பீடாதிபதி எஸ்.பாலகுமாரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சுன்னாகம் சிவன் கோவில் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

சுன்னாகம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் மட்டும் காணப்படும் கழிவு பிரச்சினை ஏனைய பிரதேசங்களுக்கும் பரவும் அபாயம் காணப்படுகிறதது அன்றும் அதனால் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.