செய்திகள்

சுவிஸிவங்கியில் இலங்கையரின் கணக்குகளை பரிசீலிக்க உயர்மட்ட அங்கீகாரத்தை கோருகிறார் நிதியமைச்சர்

சுவிஸ் வங்கியில் உள்ள இலங்கையர்களின் கணக்குகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு பாராளுமன்றம், ஜனாதிபதி மற்றும் பிரமரின் ஒத்துழைப்புகளை எதிர்பார்ப்பதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை 23ஃ2க்கு அமைய வாசுதேவ நாயணக்கார எம்.பியால் விடுக்கப்பட்ட கூற்றுக்கு பதிலளிக்கையிலேயே நிதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

சுவிஸ் வங்கியில் 92 இலங்கையர்களுடையது என கூறப்படும் 85 மில்லியன் சுவிஸ் பிராங் கணக்குகளில் இருப்பதாகவும் இந்த கணக்குகள் வைத்திருப்பவர்களில் அரசியல்வாதிகள், வர்த்தகர்கள் மற்றும் மொடலிங் அழகிகளும் உள்ளடங்குவதாக ஊடகமொன்றில் செய்தி வெளியாகியுள்ளதாக சுட்டிக்காட்டிய வாசுதேவ நாணயக்கார எம்.பி, இந்தப் பணம் சட்ட விரோதமாகவா அல்லது சட்ட ரீதியிலா வைப்பிலிடப்பட்டுள்ளது என்பதனை ஆராய்ந்து சபைக்கு அறிவிப்பீர்களா என விசேட கூற்றை முன்வைத்து கேள்வியெழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த நிதி அமைச்ரச் ரவி கருணாநாயக்க தெரிவிக்கையில் –

இது தொடர்பாக நிதிப் புலனாய்வு விசேட பிரிவுக்கு தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக ஆராய நடவடிக்கையெடுப்போம். இதற்கு பாராளுமன்றம், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம். அத்துடன் இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பாக ஆராயப்படும் என்றார்.