செய்திகள்

சுஹாசினியுடைய கருத்தை தவறு எனச் சொல்லவில்லை! கமல் சுவாரஷ்யப் பேச்சு

‘ஓ காதல் கண்மணி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அப்போது சுஹாசினி மணிரத்னம் பேசியதாவது:

“எப்படி தகுதியுள்ளவர்கள்தான் படத்தில் நடிக்க முடியுமோ, ஒளிப்பதிவு பண்ண முடியுமோ, ரஹ்மான் மாதிரி மியூசிக் தெரிஞ்சவங்கதான் மியூசிக் பண்ண முடியுமோ அதேமாதிரி எழுதத் தெரிஞ்சவங்கதான் விமரிசனம் எழுதணும். இப்போ கம்ப்யூட்டர் உலகத்துல, மவுஸ் மூவ் பண்ணத் தெரிஞ்சவங்க எல்லாம் எழுத்தாளராயிட்டாங்க.” என்றார். சுஹாசினியின் இந்தப் பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில், சுஹாசினியின் கருத்து குறித்து வார இதழ் ஒன்றுக்கு கமல் பதிலளித்துள்ளார். ’மௌஸ் பிடிக்கிறவங்க எல்லாரும் விமர்சனம் பண்றாங்க. தகுதி உள்ளவங்கதான் விமர்சனம் பண்ணணும்’ என்று சுஹாசினி சொல்லி இருக்காங்களே என்று கமலிடம் கேட்டதற்கு அவர் சொன்ன பதில்:

“அப்போ டிக்கெட் போட்டு அத்தனை பேருக்கும் கொடுக்காதீங்க. அற்பனுக்கும் கையில் மௌஸ் கிடைத்தால், அவன் பிடிக்கத்தான் செய்வான். ஏன்னா, மௌஸ் அவனுடையது. குடை அவனுடையது போல. அதை ஒண்ணும் பண்ண முடியாது. விமர்சனத்தைத் தடுக்கவும் கூடாது. சுஹாசினியுடைய கருத்தை தவறு எனச் சொல்லவில்லை. அதுவும் ஒரு கருத்து. அவ்வளவுதான்!” என்று கூறியிருக்கிறார்.