செய்திகள்

சு.க.வுடன் இணைந்து மீண்டும் ஆட்­சி­ய­மைப்பேன்: மஹிந்த ராஜ­பக்ஷ சபதம்

“நான் பணத்தை எனது வீட்­டுக்கு கொண்டு செல்­ல­வில்லை. பாதை­களின் அபி­வி­ருத்­திக்கே செலவு செய்தேன். என்­மீது பொய்­யான குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்தி வரு­கின்­றார்கள்” எனத் தெரி­வித்­துள்ள முன்னாள் ஜனா­ தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ, “மீண்டும் சுதந்­திரக் கட்சி குழு­வி­ன­ருடன் இணைந்து ஆட்­சியை அமைப்பேன்” என சூழுரைத்துள்ளார்.

இரத்­தி­ன­புரி மாவட்­டத்தின் கல­வான கொஸ்­வத்தை போதி­ராம விகா­ரையில் கடந்­த ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற மத வழி­பாட்டு நிகழ்வில் கலந்­து­கொண்­டதன் பின்னர் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரிவித்தார்.அவர் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்று கையில்,

“நூறு நாள் ஆட்­சிக்கு வந்த இந்த அர­சாங்கம் நூறு பொய்­களை கூறி­யுள்­ளது. வீதி­களை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு ஒதுக்­கப்­பட்ட நிதி­களை நான் கொள்­ளைய­டித்­துள்­ள­தாக குற்றம் சுமத்தி வரு­கின்­றார்கள். அந்த பணத்தை நான் மெத­மு­ல­ன­வுக்கு கொண்டு செல்­ல­வில்லை. அப்­ப­ணத்தில் பாதியை தான் ரணிலின் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் பத­வியை பாது­காத்து கொடுப்­ப­தற்­காக ஸ்ரீகொத்­த­வுக்கு முன்­பா­க­வுள்ள வீதிக்கு காபட் செய்­யப்­பட்­டுள்­ளது. அதனை அவர்கள் மறந்­து­விட்­டார்கள். எதிர்­வரும் காலத்தில் சு.க. குழு­வி­னர்­க­ளுடன் புதிய அர­சாங்­கத்தை அமைப்பேன்

வேலை தெரியாத டாசன்கள் என்னை தேர்­த­லுக்கு முன்பு சிறை­யில அடைப்­ப­தற்கு முயற்சி செய்­கின்­றார்கள். நான் இதற்கு முன்பு நடை­பெற்ற தேர்­தல்­களில் ் மூன்று மாதம் சிறையில் இருந்­தவன். பேய்­க­ளுக்கு பயந்தால் சுடு­காட்டில் வீடு கட்­ட­மு­டி­யாது. நான் இதற்கு பயந்­தவன் அல்ல.

கடந்த காலத்தில் இருந்த எமது அர­சாங்கம் நாட்டை அபி­வி­ருத்தி செய்­தது. அரச சேவை­யா­ளர்­க­ளுக்கு மோட்டார் வண்டி வழங்­கி­யது. தற்­போது அந்த வேலைத்­திட்­டங்கள் எங்கே? தேயிலை இறப்பர் விலைகள் அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக கூறி­னார்கள். தற்­போது அவற்றின் விலை உயர்த்­தப்­பட்­டுள்­ளதா?

தேயி­லைக்கு 80 ரூபாவும் இறப்­ப­ர் 300 ரூபா­வா­கவும் உயர்த்­தப்­ப­ட­வுள்­ள­தாக கூறி­னார்கள். தற்­போது அவர்கள் கூறி­யது நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளதா? மக்­க­ளுக்கு இந்த அர­சாங்கம் என்ன செய்­தது. இதை மக்கள் தற்­போது புரிந்த வண்ணம் உள்­ளார்கள்.

இன்று நடிகை ஒருவர் கூறு­கின்றார் நாட்டில் பணம் இல்லை என்று. நாட்டின் அமைச்சர் ஒருவர் கூறு­கின்றார் பணம் இருப்­ப­தாக இது புது­மை­யான கதை­யாக உள்­ளது. திறை­சேரியில் கோடிக் கணக்­கா­ன பணம் அச்­சி­டப்­பட்­டுள்­ளது. இந்த நாட்டின் உரிமை இல்­லாத ஒரு­வரால் கையொப்பம் இடப்­பட்­டுள்­ளது.

எமது நாட்டின் மத்­திய வங்கி தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளவர் எமது நாட்டை சேர்ந்­தவர் அல்ல. அவர் சிங்­கப்­பூரை சேர்ந்­தவர்.மத்­திய வங்கி தலை­வ­ராக நிய­மிக்­கப்­ப­டு­பவர் எமது நாட்டின் உரி­மையை பெற்­றி­ருக்க வேண்டும். தற்­போது நிய­மிக்­கப்­பட்­டுள்­ளவர் இலங்கை நாட்டின் உரிமை இல்­லாத ஒருவர். என­வேதான் அவர் மத்­திய வங்கி தலைவர் பத­வியை ஏற்­ற­தற்­காக சத்­தி­யப்­பி­ர­மானம் செய்ய வில்லை.

இப்­ப­டி­பட்ட ஒருவர் பணத்­திற்கு கையொப்­ப­மி­டு­வது பெரிய தவ­றாகும். இது குறித்து தற்­போது பிரச்­சி­னை­களும் எழுந்­துள்ளது என்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ மேலும் தெரிவித்தார்.