செய்திகள்

செட்டிகுளம் பிரதேச செயலக ஊழியாகள் ஆர்ப்பாட்டம்

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலக ஊழியாகள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிராமங்களில் அரச ஊழியர்கள் மீது வன்முறைகள் பயன்படுத்தப்படுவதாகவும் அசர ஊழியர்கள் பணியாற்றுவதற்கு அச்சமான நிலை காணப்படுவதாகவும் தெரிவித்தே இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு முன்பாக காலை 8.30 மணிக்கு ஒன்று கூடிய பிரதேச செயலகத்தின் அனைத்து ஊழியாகளும் அரச ஊழியர்கள் மீது வன்முறை வேண்டாம், வன்முறையை கையில் எடுக்காதீர்கள், மக்கள் சேவைக்கு மதிப்பளியுங்கள், நியாயமற்ற கோரிக்கையை நிறைவெற்ற நிர்ப்பந்திக்காதே, அரச ஊழியாகள் மீது வீண் அவதூறு தெரிவிக்காதே பதாதைகளை தாங்கியிருந்தனர்.

சுமார் இரண்டு மணி நேரமாக இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 (1)