செய்திகள்

சென்னையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய மும்பை:

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். சீசன் 8-ன் தகுதிச்சுற்றின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் நாணயசுழற்சியில் வென்ற மும்பை அணியின் தலைவர் ரோகித் சர்மா துடுப்பெடுத்தாடதீர்மானித்தார். அந்த அணியின் பொல்லார்டு மற்றும் சிம்மன்சின் அதிரடியில் மும்பை 188 ரன்கள் குவித்தது.

189 ரன்கள் எடுத்து நேரடியாக இறுதிப் போட்டிக்குச் செல்லும் லட்சியத்துடன் விளையாடிய சென்னை அணியின் தொடக்க வீரரான ஸ்மித் முதல் ஓவரிலேயே எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். ஆனால் அது நடுவரின் தவறான முடிவு என்ற சர்ச்சை ஏற்பட்டது. அடுத்ததாக ஹஸ்ஸி மற்றும் டூ பிளெசிஸ் இருவரும் ஜோடி சேர்ந்தனர்.

டூ பிளெசி நிதானமாக ஆட ஹஸ்ஸி 6 வது ஓவரில் வெளியேறினார். அதிரடியாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரெய்னாவும் 25 ரன்களுடன் வெளியேற சென்னை ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். தோனி இருக்கிறார் என்று மனதை தேற்றிக் கொண்ட ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சி. அடுத்து களமிறங்கிய தோனி ஹர்பஜன் சிங்கின் பந்தில் ஓட்டங்களை பெறாமலே வெளியேற அதுவரை நிதானமாக ஆடி வந்த டூ பிளெசியும் 14-வது ஓவரில் 45 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

அடுத்து பிராவோ ஜடேஜா இருவரும் ஜோடி சேர்ந்தனர். 15-வது ஓவரில் பிராவோ அடுத்து நெகி என்று அடுத்தடுத்து துடுப்பாட்ட வீரர்கள் பவிலியன் திரும்பியபடி இருந்தனர். 17-வது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸ் அடித்த ஜடேஜா அடுத்த பந்திலேயே ஆட்டமிழக்க அஷ்வின் ஷர்மா இருவரும் ஜோடி சேர்ந்தனர். 18 ஓவரின் முடிவில் சென்னை அணி 157 ஓட்டங்களை பெற்றிருந்தது
எனினும் 162 ரன்களில் சென்னை அணியை வீழ்த்தி நேரடியாக இறுதிப் போட்டிக்குச் சென்றது. மும்பை இண்டியன்ஸ் அணி.