செய்திகள்

சென்னை சென்றடைந்தார் வடக்கு முதல்வர்: ஞாயிறு முக்கிய உரை

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று வெள்ளிக்கிழமை இந்தியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு சென்னை சென்றடைந்தார்.

நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை 9 ஆம் திகதியன்று நடைபெறவுள்ள நிகழ்வொன்றில் சொற்பொழிவொன்றை நிகழ்த்துவதற்காக அரச சார்பற்ற அமைப்பு ஒன்று விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த அழைப்பை ஏற்றே முதலமைச்சர் சென்னை சென்றுள்ளார். முதலமைச்சராகப் பதவியேற்றபின்னர் விக்னேஸ்வரன் வெளிநாட்டுப் பயணம் ஒன்றை மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்.