செய்திகள்

செப்டம்பருக்குள் புதிய அரசாங்கம் அமையும் மைத்திரி பாங்கி மூனிடம் தெரிவித்துள்ளார்

செப்படம்பர் மாதத்திற்குள் புதிய அரசாங்கமொன்று அமைக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ.நா செயலாளர் நாயகம் பாங்கிமூனிடம் தெரிவித்துள்ளார்.

தொலைபேசியுடனான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளதாக நேற்று கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அந்த அமைச்சின் பேச்சாளரான மகேஷிக்கா கொலன்ன தெரிவித்துள்ளார்.

குறித்த தொலைபேசி உரையாடலின் போது நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக கருத்து பரிமாற்றப்பட்டுள்ளது. இவ்வேளையில் அடுத்த செப்டம்பர் மாதத்துக்குள் புதிய அரசாங்கம் ஏற்படுத்தப்படுமென ஜனாதிபதி பாங்கிமூனிடம் தெரிவித்துள்ளார் என மகேஷிக்கா கொலன்ன தெரிவித்துள்ளார்.