செய்திகள்

செப்ரெம்பர் வரை விசாரணை அறிக்கை போடப்பட்டது : ஒரே ஒரு முறை மட்டும் தான் என்கிறார் ஆணையாளர்

இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பான ஐ.நா. விசாரணை அறிக்கையை வெளியிடுவதை பின்போட வேண்டும் என்று ஐ. நா . மனித உரிமைகள் சபை ஆணையாளர் மனித உரிமைகள் சபைக்கு விடுத்த பரிந்துரையை சபை ஏற்றுக்கொண்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் சயிட் ராட் அல் ஹுசைன் , பிற்போடுவது என்ற இந்த முடிவு மிகவும் கடினமானதாக இருந்ததாக குறிப்பிட்டதுடன், ஒரே ஒரு முறை மட்டுமே இந்த அறிக்கை பிற்போடப்படுவதாகவும் நிச்சயமாக செப்ரெம்பர் வெளியிடப்படும் என்றும் உறுதியளித்தார்.

இலங்கையில் ஏற்பட்ட மாற்றத்தின் அடிப்படையில் அறிக்கையை வெளியிடுவதை தாமதப்படுத்த வேண்டும் என்று வலுவான வாதங்கள் முன்வைக்கப்பட்டதாகவும் புதிய தகவல்கள் வெளிவந்து அறிக்கையினை வலுப்படுத்த உதவும் என்றும் அவர் கூறினார்.

தற்காலிகமாக ஒரே ஒரு தடவை அறிக்கையினை வெளியிடுவதை பின்போடுவது மனித உரிமைகள் விடயத்தில் புதிய அரசாங்கம் ஒத்துழைப்பதற்கான இடைவெளியை வழங்கும் என்று மனித உரிமைகள் நிபுணர்கள் இணங்கியதகவும் ஹுசைன் தெரிவித்தார்.

இலங்கையின் முன்னைய அரசு போல அல்லாமல் தற்போதைய அரசாங்கம் , மனித உரிமைகள் விடயத்தில் தனது அலுவலகத்துடன் ஒத்துழைப்பதற்கு உறுதிமொழிகளை வழங்கி இருப்பதாகவும் தெரிவித்த அவர் அறிக்கையை தாமதப்படுத்துவது தொடர்பிலான அச்சங்கள் மற்றும் கவலைகளை தான் புரிந்து கொள்வதாகவும் டேஹ்ரிவித்த அவர் அறிக்கை செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என்ற தனது திடமான மற்றும் தனிப்பட்ட முறையிலான உறுதிமொழியினை வழங்குவதாகவும் கூறினார்.