செய்திகள்

சைபர் தாக்குதல்களை தொடர்ந்து வடகொரியா மீது அமெரிக்கா புதிய தடைகளை விதித்தது

சொனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் கணணி வலையமைப்புகள் மீது சைபர் தாக்குதல்களை மேற்கொண்டதற்காக அமெரிக்கா வடகொரியா மீது புதிய தடைகளை விதித்துள்ளது.
வடகொரியாவை சேர்ந்த பத்துபேர் மற்றும் மூன்று நிறுவனங்கள் மீது தடைவிதிக்கும் ஆணையில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபமா கைச்சாத்திட்டுள்ளார்.
அமெரிக்க நிறுவனமொன்றின் மீது சைபர் தாக்குதல்களை மேற்கொண்டமைக்காக நாடு ஒன்றின் மீது தடைவிதிக்கப்பட்டுள்ளமை இதுவே முதற்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
சொனி நிறுவனத்தின் மீது மேற்கொள்ளபட்ட சைபர் தாக்குதல்களே இந்த தடைக்கு காரணம் என வெள்ளை மாளிகை தெரிவித்தாலும்,எதிர்காலத்தில் சைபர் தாக்குதல்களை மேற்கொள்ளும் வடகொரியாவின் பாதுகாப்பு அமைச்சின் திறனை குறைப்பதே இதன்நோக்கம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சமாதானத்தின் பாதுகாவலர்கள் என்ற அமைப்
பு கடந்த வாரம் சொனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மீது சைபர் தாக்குதல்களை மேற்கொண்டு அதன் மின்னஞ்சல்கள், தனிப்பட்ட ஆவணங்களை பகிரங்கப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வடகொரியாவை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இன்டவியூ திரைப்படத்தை காண்பிக்கும் திரையரங்குகள் மீது தாக்குதல்களை மேற்கொள்ளப்பபோவதாகவும் அந்த அமைப்பு எச்சரித்திருந்தது