செய்திகள்

சோமவன்சவின் புதிய கட்சி இன்று ஆரம்பம்

ஜே.வி.பியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் புதிய கட்சியின் ஆரம்ப மாநாடு இன்று கொழும்பில் நடைபெறவுள்ளது.

கொழும்பு புதிய நகர மண்டபத்தில் காலை 10 மணியளவில்இந்த மாநாடு நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் முதலாம் கட்டம் பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கெனவும் இரண்டாவது கட்டம் கட்சி உறுப்பினர்களுக்கெனவும் நடைபெறவுள்ளது. இதன்போது புதிய கட்சியின் பெயர் , கட்சியின் தலைவர்கள் உள்ளிட்ட பிரதானிகள் தெரிவு இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் ஜே.வி.பியின் தற்போதைய கொள்ளைகளிலிருந்து முரண்பட்டு அந்த கட்சியிருந்து வெளியேறிய அவர் புதிய கட்சியை ஆரம்பிக்க நடவடிக்கையெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.