செய்திகள்

ஜடேஜாவுடனான மோதல் எனது பந்துவீச்சைபாதித்துள்ளது- ஆன்டர்சன்

இந்திய அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ரவீந்திரஜடேஜாவுடனான மோதல் சம்பவத்திற்கு பின்னர் ஓரு பந்துவீச்சாளாராக தன்னால் முன்னர் போன்று விளையாடமுடியவில்லை என இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் டிரென்ட்பிரிஜ் டெஸ்டில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்தே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்ட டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் வீரர்கள் மதியஉணவிற்காக வீரர்கள் பவிலியனிற்கு திரும்பிக்கொண்டிருந்தவேளை ஆன்டர்சன் ஜடேஜாவை பிடித்து தள்ளினார் என இந்திய அணி வீரர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக விசாரணைகளை மேற்கொண்ட சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இரு வீரர்கள் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விலக்கியிருந்தது.
எனினும் இவ்வாறு சர்வதேசகிரிக்கெட் கவுன்சிலால் கண்காணிக்கப்படுகின்றோம் என்ற எண்ணம் காரணமாக தன்னால் முன்னரை போன்று ஓரு வேகப்பந்துவீச்சாளருக்குரிய ஆக்ரோசத்துடன் பந்து வீச முடியவில்லை என அன்டர்சன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக 2015 உலககிண்ண போட்டிகளில் அது தன்னை மிகமோசமாக பாதித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட தொடரில் அவர் 5 விக்கெட்களை மாத்திரம் கைப்பற்றியிருந்தார்.
குறிப்பிட்ட சம்பவத்திற்கு பின்னர் நான் நிச்சயமாக மாறிவிட்டேன்,இந்த சம்பவம் நிச்சயமாக உலககிண்ணப்போட்டிகளில் எனது பந்துவீச்சில் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுடனான தொடரில் அது என்னை பாதிக்கவி;ல்லை, அந்த தொடரில் நான் வெற்றி பெறவேண்டும் என்ற மூர்க்கத்தனத்துடன் விளையாடினேன், ஆனால் அளவுக்கதிகமான ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தவில்லைஎன அவர் தெரிவித்துள்ளார்.