செய்திகள்

ஜனநாயகத்துக்கும் அராஜகத்துக்கும் இடையிலான போரே இன்றைய தேர்தல்: வடக்கு முதலமைச்சர்

இன்று நடைபெறும் ஜனாதிபதித் தேர்தல் ஜனநாயகத்துகும் அராஜகத்துக்கும் இடையிலான போராட்டமாகும். இதில் ஜனநாயகத்தையே நாம் ஆதரிக்கின்றோம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கொழும்பு, தேஸ்டன் கல்லுரியில் இன்று காலை வாக்களித்த விக்னேஸ்வரன். அதன் ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்ட போதே இதனைத் தெரிவித்தார்.

எதிரணியின் பொது வேட்பாளராகப் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவிதமான உத்தரவாதத்தையும் பெற்றுக்கொள்ளாமல் ஆதரவளிக்கின்றதா எனக் கேட்கப்பட்டபோது பதிலளித்த விக்னேஸ்வரன், இலங்கை அரசியலில் எதனையும் வெளிப்படையாகச் சொன்னால் மாறுபட்ட விளைவுகளே ஏற்படும். அந்த நிலையில் வாய் மூலமாக வெளிப்படுத்தாமல் புரிந்துணர்வின் அடிப்படையிலேயே தமது ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்தார்.

“பல கட்சிகள் இணைந்து உருவாக்கிய எதிரணிகளே மைத்திரியை களமிறக்கியுள்ளன. அதில் சிறுபான்மைக் கட்சிகள் பலவும் இணைந்திருக்கின்றன. சிறுபான்மைக் கட்சிகளுக்கு இசைந்தே அவர் செயற்படுகின்றார். அதனனால் அவரில் நம்பிக்கையுள்ளது.

தூர நோக்கு கிட்டிய நோக்கில் நாம் செயற்பட வேண்டிய தேவை உள்ளது. கிட்டிய நோக்குத் தீர்வை அவரிடம் பெறாம் என்ற நம்பிக்கை உள்ளது. தூர நோக்கை பொறுத்திருந்து பார்ப்போம். அரசியல் தீர்வையே தூர நோக்கு எனக் குறிப்பிடுகின்றோம்” எனவும் விக்னேஸ்ரன் தெரிவித்தார்.