செய்திகள்

ஜனாதிபதிக்கு மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆறு மாகாண முதலமைச்சர்கள் மகஜர்

தமது பதவிகளை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் மேல், மத்திய, சப்ரகமுகவ, வடமத்திய தென் மற்றும் வடமேல் மாகாண முதலமைச்சர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு மகஜர் அனுப்பி வைத்துள்ளனர்.

தனிக் கட்சியொன்றுக்கு பெரும்பான்மை பலம் இருந்தால் ஆளுநரினால் முதலமைச்சரை தெரிவு செய்ய முடியும் என அக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஊவா மாகாண சபையைப் போன்றே தாம் பிரதிநிதித்துவம் செய்யும் மாகாணங்களிலும் முதலமைச்சர் பதவிகளில் மாற்றம் செய்ய முயற்சிப்படுகின்றது. அமைச்சப் பதவிகளிலும் மாற்றம் ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.

கட்சி தாவல் ஊடாக மாகாண சபைகளின் முதலமைச்சர் பதவிகளில் மாற்றத்தை செய்ய முயற்சிக்கப்படுவதாகவும் அதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதியிடம் முதலமைச்சர்கள் கோரியுள்ளனர்.