செய்திகள்

ஜனாதிபதி செயலக ஆவணங்கள் பழைய பத்திரிகை கொள்வனவு கடையிலிருந்து மீட்பு

ஜனாதிபதி செயலகத்தின் ஆவணங்கள் சில பொரளை பகுதியில் அமைந்துள்ள போத்தல் மற்றும் பழைய பத்திரிகை கொள்வனவு கடையொன்றிலிருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
நீல நிற காரொன்றில் வந்த ஒருவர் இதனை 320ரூபாவுக்கு விற்று சென்றதாக அந்த கடைக்காரர் தெரிவித்துள்ளார்.
குறித்த ஆவணங்களில் 2012 முதல் 2015 வரையான  உணவு மற்றும் தேநீர் செலவுகள் தொடர்பான கணக்கு விபரங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.