செய்திகள்

ஜனாதிபதி தன்னை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அச்சுறுத்தியதாக விஜயதாச ராஜபக்ச குற்றச்சாட்டு

ஜனாதிபதி தன்னை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அச்சுறுத்தியுள்ளார் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.கொழும்பு போர்ட்சிட்டி தொடர்பில் தான் தெரிவித்த கருத்துகளுக்காக ஜனாதிபதி எனக்கு அச்சுறுத்தல் விடுத்தார் என விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தினார். நாடு ஒன்றின் தலைவரிடமிருந்து நான் இதனை எதிர்பார்க்கவில்லை என விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.இதன்போது ஜனாதிபதியின் பாணியிலேயே நான் பதிலளித்தேன். தற்போது எனது மற்றும் எனது குடும்பத்தவர்களின் உயிர்களின் பாதுகாப்பு குறித்து நான் அச்சமடைந்துள்ளேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.(15)