செய்திகள்

“ஜிகர்தண்டா” புகழ் பாபி சிம்ஹா ஹீரோவாக அறிமுகமாகும் படம் ‘உறுமீன்’

“ஜிகர்தண்டா” புகழ் பாபி சிம்ஹா ஹீரோவாக அறிமுகமாகும் படம் ‘உறுமீன்’. இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் ‘மெட்ராஸ்’ படத்தில் அன்புவாக நடித்து எமது மனதைக் கவர்ந்த கலையரசன் நடித்துள்ளார். ஹீரோயினாக ரேஷ்மி நடித்துள்ளார். இவர் ‘இனிது இனிது’ ‘பர்மா’ ஆகிய படங்களில் நடித்தவராவார். இவர்களுடன் மனோபாலா, அப்புக்குட்டி, காளி வெங்கட், சாண்ட்ரா, ஆகியோர் முக்கியமான வேஷங்களில் நடித்துள்ளனர்.

“ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடியிருக்குமாம் கொக்கு’ எனும் பழமொழிதான் படத்தோட மையக்கரு. ‘‘வேகமாக வேட்டையாடற உயரினம் சிறுத்தைன்னு நீங்க நினைச்சா தப்பு. ஒரே இடத்தில் நின்றபடியே வேகம் காட்டி வேட்டையாடுறது கொக்குதான் உலகில் வேகமாக வேட்டையாடும் உயிரினம்’ அதனால்தான் இந்தப் படத்துக்கு “உறுமீன்’ எனப் பெயர் வைத்தோம் என்கிறார் படத்தின் இயக்குநர் சக்திவேல் பெருமாள்சாமி.

இந்தப் படம் பற்றி அவர் மேலும் கூறும்போது,
“விறுவிறுப்பான திரில்லர் கலந்த ஆக்க்ஷன் படமாக உருவாகி வருகிறது. காடுகளைக் குறிக்கும் நிறம் பச்சை அதேநேரம் நகரத்தின் இன்னொரு முகத்தை கறுப்பு நிறம் மூலமாக சொல்லலாம். பச்சையும், கருப்பையும் கலந்தால் சாம்பல் நிறம் கிடைக்கும். சாம்பல் நிறம்தான் இந்தப் படத்தின் குறியீடு. அதாவது, கார்ப்பரேட் கம்பெனிகள் எப்படி நம் நாட்டிற்கு வந்தன? அவற்றின் ஒரிஜினல் முகம் என்ன? இதைத்தான் த்ரில் கலந்து ‘உறுமீன்’ படத்தில் சொல்லியிருக்கிறேன் என்றார்.

அவரிடம் இளம் நாயகன் சிம்ஹாவையும், கலையரசனையும் ஒரே படத்தில் ஒன்றாகப் போட்டது எப்படி எனக் கேட்டோம்,

‘‘’நேரம்’ படத்தில் நடித்த காலத்திலிருந்தே சிம்ஹா என் நண்பன். ‘ஜிகர்தண்டா’க்கு முன்னாடியே, இந்தப் படத்தை ஆரம்பிச்சிட்டோம். ‘மெட்ராஸ்’ல அன்புவாக நடிச்ச கலையரசனும் அந்தப் படத்துக்கு முன்பாகவே இதில் நடிக்க ஒப்பந்தமானார்கள். அவரும் முக்கியமான வேஷத்தில் வருகிறார். இரண்டு பேருமே இந்தப் படம் வெளிவந்தவுடன் இன்னும் பிசியாகிடுவாங்க’ என்றார்.

ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் G.டில்லிபாபு இப்படத்தை தயாரிக்கிறார்.

_MG_1930 _MG_2073 _MG_2851 _MG_5669 kalaiarasan Dir Sakthivelperumalsamy (1) IMG_0246 IMG_0377 IMG_0502 producer.dillibabu