செய்திகள்

ஜுன் 22 இல் ரணில் எம்.பியாக பதவியேற்பார்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 22 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார் என்று கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனத்திற்கு ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்க கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அனைவரும் இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி எதிர்வரும் 22 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும் போது ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார் என்று வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் நாட்களில் இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
-(3)