செய்திகள்

ஜூலை 6ல் விவாதத்திற்கு வரும் ரவி கருணாநாயக்க மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை மாதம் 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று கூடிய கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடலின் போதே இந்த இணக்கம் காணப்பட்டுள்ளது.

பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி, கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை ஊடகங்களுக்கு அறித்தார்.