செய்திகள்

ஜெயம் ரவிக்காக குத்துப் பாடல் பாடிய சிம்பு

ஜெயம் ரவி, அஞ்சலி, த்ரிஷா, சூரி ஆகியோர் நடிக்கும் ‘அப்பா டக்கர்’ படத்தை இயக்கி வருகிறார் சுராஜ்.

இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு யு.கே.செந்தில்குமார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. கடந்த ஜூலையில் சென்னையில் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது.

இப்படத்திற்காக தமன் இசையில் இசை அமைப்பாளர் டி.இமான் ஏற்கெனவே ஒரு பாடலை பாடியுள்ள நிலையில், நடிகர் சிம்புவையும் ஒரு பாடல் பாட வைத்துள்ளார் எஸ்.எஸ்.தமன். ‘ஹிட் சாங்குதாண்டி..’ என்று துவங்கும் அந்த பாடலின் பதிவு சமீபத்தில் நடைபெற்றது. அதுவும் சிம்பு ஒரே இரவில் பாடி முடித்து கொடுத்துவிட்டுச் சென்றார். படத்தில் இந்தப் பாடலுக்கு ஜெயம் ரவி, த்ரிஷா நடனமாடவிருக்கின்றனர்.

முன்னதாக பாடல் பதிவிற்காக ரெக்கார்டிங் ஸ்டூடியோவுக்கு வந்த சிம்புவை தயாரிப்பாளர் முரளிதரன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இது சிம்புவின் பாடல்களில் டாப் லிஸ்டில் இடம் பிடிக்கும் என்கிறார் இசையமைப்பாளர் தமன். ஏற்கெனவே எஸ்.எஸ்.தமன் இசையில் ‘ஒஸ்தி’, ’வாலு’ ஆகிய படங்களுக்கு சிம்பு பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.