செய்திகள்

ஜெயலலிதா பிறந்தநாளுக்கு தமிழகம் முழுவதும் அங்கபிரதட்சணம், தீச்சட்டி, பறவைக்காவடி

அதிமுக பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதாவின் 67வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தமிழகம் முழுவதும் வமரிசையாக நடை பெற்றது. ஆலயங்களில் சிறப்பு வழிபாடு, தீச்சட்டி ஏந்துதல், பாலபிஷேகம், அன்னதானம், ரத்ததானம் என அதிமுக தொண்டர்களும், அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரகாலமாகவே அமர்க்களமாக கொண்டாடிவருகின்றனர்.

இலவச திருமணங்கள், சீர்வரிசைகள் கொடுப்பது, ரத்ததானம் வழங்குவது என்று பல்வேறு நிகழ்வுகளை நடத்தி தொண்டர்கள் தமது விசுவாசத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.