செய்திகள்

ஜோன்சன் பெர்னாண்டோவின் விளக்க மறியல் நீடிப்பு

சதொச நிறுவனத்தில் மேற்கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜோன்சன் பெர்னாண்டோவின் விளக்க மறியல் எதிர்வரும் ஜூன் 8 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று குருநாகலை நீதிமன்றத்தில் அவர் ஆஜர் செய்யப்பட்டபோது நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.