செய்திகள்

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குருநாகல் உயர் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

25,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 25 இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் மூன்றிலும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சதோச நிறுவனத்தின் கொடுக்கல் – வாங்கல் தொடர்பில் முன்னாள் அமைச்சர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு பிணை வழங்குவதற்கு சட்டமா அதிபர் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்கவில்லை.