செய்திகள்

ஜோன்ஸ்டன் பெர்னான்டோ கைதானார்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ நிதி மோசடி விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ச.தொ.சவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் மோசடி தொடர்பாக விசாரணைக்கென இன்று காலை கொழும்பிலுள்ள நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்த அவர் சற்று முன்னார் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.