செய்திகள்

ஜோன்ஸ்டன் மீண்டும் 25 வரை விளக்க மறியலில்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ மீண்டும் எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ச.தொ.ச நிறுவனத்தில் இடம்பெற்றதாக தெரவிக்கப்படும் நிதி மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த இவர் மீண்டும் இன்று குருநாகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை தொடர்ந்தும் 25ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை ஜோன்ஸ்டனுக்கு பிணை வழங்குமாறு அவர் தரப்பு சட்டத்தரணிகள் நீதவானிடம் கேட்டுக்கொண்ட போதும் அதனை நீதவான் நிராகரித்துள்ளார்.