செய்திகள்

ஜோர்தான் விமானவோட்டி உயிருடன் எரித்து படுகொலை- ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் பயங்கரம்

ஜோர்தானை சேர்ந்த விமானஓட்டியை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் உயிருடன் எரித்துக்கொலை செய்யும் வீடியோ வெளியாகி மிகுந்த பரபரப்பை உருவாக்கியுள்ள அதேவேளை இதற்கு பழிவாங்கப்;போவதாக ஜோர்தான் எச்சரித்துள்ளது.

குறிப்பிட்ட விமானஓட்டியை விடுவிப்பதற்காக தாங்கள் விடுதலைசெய்யவிருந்த இஸ்லாமிய தீவிரவாதியொருவரிற்கு மரணதண்டனை வழங்கப்போவதாக ஜோர்தான் எச்சரித்துள்ளது.
குறிப்பிட்ட விமானவோட்டி உயிருடன் எரிய+ட்டப்படுவதை காண்பிக்கும் அந்த வீடியோ ஜோர்தானில் பாரிய அச்சத்தையும் சீற்றத்தையும் உண்டுபண்ணியுள்ளது.ஜோர்தான் இதற்கு பழிவாங்கவேண்டும்,குறிப்பிட்ட தீவிரவாத அமைப்பிற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடவேண்டும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.

டிசம்பர் மாதம் சிரியாவில்சுட்டுவீழ்த்தப்பட்ட விமானத்தின் விமானவோட்டியை உயிருடன் எரித்துக்கொலை செய்யும் வீடியோவே வெளியாகியுள்ளது.லெப்டினன் கசாஸ்பேய் வீரமரணமடைந்து விட்டதாக ஜோர்தானிய முப்படையினரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அவர் சிந்திய குருதி வீணாகாது, எங்களது தண்டனையும் பழிவாங்கும் செயலும் ஜோர்தானிய மக்களின் வேதனையை விட பல மடங்காக காணப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜோர்தானிய தலைநகரில் 2005 இல் இடம்பெற்ற தாக்குதல்களுக்கு காரணமானவர் என குற்றம்சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள ஈராக்கைசேர்ந்த பெண்தற்கொலை குண்டுதாரிக்கே ஜோர்தான் மரணதண்டனை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.படுகொலை செய்யப்பட்டுள்ள விமானவோட்டிக்கு பதில் இவரையே விடுதலை செய்வதற்கு ஜோர்தான்முன்வந்திருந்தது.
ஏனைய மூன்று தீவிரவாதிகளுடன் அவருக்கும் மரணதண்டனை வழங்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.