செய்திகள்

டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் புதிய வைத்தியசாலை திறந்து வைக்க நடவடிக்கை

டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் புதிய வைத்தியசாலை கட்டிடத்தை கட்டம்கட்டமாக திறந்து வைப்பதற்கு சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

இதன் முதல் கட்டமாக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் பழைய கட்டிடத்தில் உள்ள வெளிநோயாளர் பிரிவையும், கிளினிக் பிரிவையும் ஓகஸ்ட் மாதம் முதல் கிழமையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் புதிய கட்டிடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு திறந்து வைக்கவுள்ளதாக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர். அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.

இந்தியா அரசாங்கத்தின் 500 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் குறித்த டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதில் 150 கட்டல்கள் உட்பட 6 சத்திர சிகிச்சை நிலையங்கள், 3 அவசர சிகிச்சை பிரிவு, மின்தூக்கி வசதிகள் உட்பட பல வசதிகள் இக்கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்விடயம் தொடர்பாக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர். அன்வர் ஹம்தானி கருத்து தெரிவிக்கையில்-

தற்போது புதிய கட்டிடத்தில் சகல வசதிகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. குறித்த வைத்தியசாலைக்கு இந்திய அரசாங்கத்தினால் புதிய இயந்திரங்கள், உபகரணங்கள் இன்னும் சில கொண்டு வரப்பட்டுள்ளது. அதிகமான வசதிகள் செய்து நிறைவு பெற்றுயிருக்கின்ற இவ்வேலையில் ஓகஸ்ட் மாதம் முதல் கிழமையில் முதல் கட்டமாக வெளிநோயாளர் பிரிவும், கிளினிக் பிரிவும் திறந்து வைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

எனினும் இக்கட்டிடத்தை திறந்து வைக்குமாறு கோரி பல தடவைகள் பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டியிருந்தமை குறிப்பிடதக்கது.

IMG_20150625_104715 copy