செய்திகள்

டில்லி சென்ற அமைச்சர் மங்கள சமரவீர, சுஷ்மா சுவராஜூடன் இன்று காலை பேச்சு

புதுடில்லிக்கான விஜயத்தை மேற்கொண்டு நேற்று மாலை இந்தியா சென்றுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை இன்று காலை இந்திய வெளிவிவகார அமைச்சு அலுவலகத்தில் சந்தித்துப் பேசியுள்ளார்.
000
வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்று ஐந்து தினங்களுக்குள்ளாகவே இந்தியாவுக்கான விஜயத்தை அவர் மேற்கொண்டிருபபது இந்தியாவுடனடன உறவுகளுக்கு இலங்கையின் புதிய அரசாங்கம் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் புலப்படுத்துவதாக அமைந்திருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

இன்று காலை இடம்பெற்ற பேச்சுக்கள் சுமூகமாகவும், இரு தரப்பு நலன்களை அடிப்படையாகக் கொண்டதாகவும் அமைந்திருந்தது என வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. டில்லியில் இடம்பெற்ற பேச்சுக்களில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.பி.சின்ஹாவும் கலந்துகொண்டார்.