செய்திகள்

டெங்குக்கு யாழ்ப்பாணத்தில் இருவர் பலி! கட்டுப்படுத்த மாகாண சபை உடன் நடவடிக்கை

வடமாகாணத்தில் வேகமாகப் பரவும் டெங்குக் காய்ச்சலுக்கு இருவர் பலியாகியுள்ளதாக வடமாகாண சபை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனையடுத்து டெங’கைக் கட்டுப்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கையை எடுக்குமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மாகாண சுகாதார அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

யாழ். நூலகத்தில் இன்று இடம்பெற்ற இது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் மாகாண சபை உறுப்பினர்களும், யதழ். மாநகரசபை அதிகாரிகளும் கலந்துகொண்டனர். டெங்குவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வதற்கான செயற்திட்டங்கள் இங்கு தீட்டப்பட்டுள்ளன.