செய்திகள்

டெய்லி மிரர் ஆசிரியரை தொடர்பு கொண்டதாகவும் ஆனால் அவரை அச்சுறுத்தவில்லை என்றும் ஒப்புக்கொண்ட கோதபாய

கிழக்கு மாகாணத்தில் கருணா குழுவினரின் செயற்பாடுகள் பற்றி 2007 ஆம் ஆண்டு டெய்லி மிரர் பத்திரிகையில் தொடர்ச்சியாக கட்டுரைகளை வெளியிட்டமை தொடர்பில் அந்த பத்திரிகையின் ஆசிரியர் சம்பிக்க லியநாராச்சியை அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தொடர்புகொண்டு அச்சுறுத்தியதாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்களில் இருந்து தெரியவந்திருக்கிறது.

கோதபாயவின் அச்சுறுத்தலின் பின்னர் கருணாவை லியனாராச்சி தொடர்பு கொண்டதாகவும் அதன்போது தனது உறுப்பினர்கள் அவருக்கு எந்த கெடுதலையும் செய்யமாட்டார்கள் என்று கருணா உறுதியளித்ததாகவும் தெரியவருகிறது.

இதேவளை, இந்த சம்பவம் குறித்து ஜனாதிபதி லியனாரச்சியிடம் வருத்தம் தெரிவித்ததுடன் அவரது பாதுகாப்பு குறித்த தனது அக்கறையை தெரிவித்ததாகவும், இந்த சம்பவம் தொடர்பில் லியனாராச்சியை தொடர்பு கொண்டதை கோதபாய பகிரங்கமாக ஒப்புக்கொண்டதாகவும் ஆனால் அவரை தான் அச்சுறுத்தவில்லை என்று கூறியதாகவும் விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.