செய்திகள்

டெல்லியில் குவியும் சடலங்கள் விடாமல் எரியும் சிதைகள் – 24 மணி நேரம் காத்திருக்கும் சொந்தங்கள்

டெல்லியில் கொரோனா நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மயான பூமியில் சடலங்கள் குவிந்தபடி உள்ளன.டெல்லியில் கெரோனா தொற்றுக்கு நேற்று மட்டும் மேலும் 381 பேர் பலியானதால், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டி உள்ளது.கடந்த 6 நாட்களாக தினசரி 300க்கும் மேற்பட்டோரின் உயிரை கொரோனா பறித்து வருகிறது.
இதனால் மயானத்தில் நிரம்பி வழியும் சடலங்களை எரிக்க முடியாமல் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. உடல்களுடன்  உறவினர்கள் பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் உருவாகி உள்ளது.காசிப்பூர் மயானத்தில் எங்கு பார்த்தாலும் சடலங்கள் எரிந்து கொண்டிருந்தன. இடப்பற்றாக்குறை காரணமாக பூங்காவும் மயான பூமியாக மாற்றப்பட்டுள்ளது.உயிரிழப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதால் தினசரி ஆயிரம் சடலங்களை எரிக்கும் அளவுக்கு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன.