செய்திகள்

டைனோசர் காதல் ஜோடி எலும்புக் கூடு கண்டுபிடிப்பு

சீனாவின் மங்கோலியாவில் உள்ள கோபி பாலைவன பகுதியில் பூமிக்குள் புதைந்த நிலையில் 2 டயனோசர் எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அது குறித்து அல்பெர்டா பல்கலைக்கழகத்தின் பழங்கால ஆராய்ச்சி துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

அதில், அவை பறவைகள் போன்று பறக்க கூடியவகை டயனோசர்கள் என தெரியவந்தது. மேலும் 7½ கோடி ஆண்டுகளுக்கு முன்பு இவை வாழ்ந்திருக்கலாம்.

இவற்றில் ஒன்று ஆண், மற்றொன்று பெண் ஆகும். இவற்றின் எலும்பு கூடு படிமங்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிய நிலையில் இருந்தன.

எனவே, அவை ‘செக்ஸ்’சில் ஈடுபட்ட போது மண்ணில் புதைந்து அழிந்திருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். அந்த டயனோசர்களை காதல் ஜோடி என அழைக்கின்றனர்.

அவற்றுக்கு காதலர்களின் பெயர்களான ரோமியோ– ஜூலியட் என பெயரிட்டுள்ளனர்.