செய்திகள்

டோனியின் ஓய்வு அறிவிப்பு அதிர்ச்சி தருகிறது என்கிறார் ரவிசாஸ்திரி

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது என்ற டோனியின் அறிவிப்பால் நாங்கள் அதிர்ச்சியடைந்தோம் என இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குநர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.

டோனியின் ஓய்வு குறித்த அறிவிப்பால் நாங்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தோம்,(ஸ்டம் செய்யப்பட்டோம்)
அது குறித்த அறிகுறி எதுவும் இருக்கவில்லை,அது தீடிரென வெளியாகியது.டெஸ்ட்போட்டி முடிந்த பின்னர் நடைபெறும் பரிசில்கள் வழங்கப்படும் நிகழ்விற்கு பின்னரே நான் அதனை அறிந்தேன்.அவர் அதனை எங்களிடம் தெரிவித்தபோது அவரது குடும்பத்தினருக்கு கூட அது தெரியாது என்பதை நாங்கள் உணர்ந்தோம், ஓய்வுபெறுவது என்பது தனிப்பட்ட விடயம், மிகச்சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு தாங்கள் எப்போது ஓய்வுபெறவேண்டும் என்பது தெரிந்திருக்கும்.