செய்திகள்

தகவல் அறியும் சட்டத்தின் நகல் நேற்று வெளியீடு: மார்ச்சில் பாராளுமன்றில் சட்டமூலம்

தகவல் அறியும் சட்டத்தின் நகல் நேற்று வெளியிடப்பட்டது. பொதுநிர்வாக, உள்ளூராட்சி மற்றும் பெளத்தசாசன அமைச்சர் கரு ஜயசூரிய இதனை வெளியிட்டார். மார்ச் மாதத்தில் இது பாராளுமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டு சட்டமூலமாக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

தகவல் அறியும் சட்டம் உலகில் முக்கியமானதொரு சட்டமாக அமையாவி ட்டாலும், 10 வருடங்களாக கொண்டுவரப்படாமலிருந்த இந்தச் சட்டத்தை மேலும் தாமதப்படுத்த அரசாங்கம் விரும்பவில்லையென அமைச்சர் தெரிவித்தார்.

தகவல் அறியும் சட்டம் தொடர்பாக பல்வேறு துறையினருடன் கலந்துரையாடும் நிகழ்வு நேற்று இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தில் நடைபெற்றது. ஊடகத்துறை மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சின் செயலாளர் கருணாரத்ன பரணவிதான, ஜனாதிபதியின் ஆலோசகர் ஜயம்பதி விக்ரமரட்ன, சட்டநிபுணர் வெலியமுன, ஊடகத்துறையின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டி ருந்தனர்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் பொதுத் தேர்தலுக்குச் செல்வதற்கு முன்னர் தகவல் அறியும் சட்டத்தை பாராளுமன்றத்தில் கொண்டுவருவதற்கே நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்தச் சட்டமூலத்தின் நகலை வெளியிட்டுள் ளோம்.

துறைசார் வல்லுனர்களின் கருத்துக்களைப் பெற்று எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் இச்சட்டத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். இந்தச் சட்டத்தின் நகலை ஊடகத் துறைசார்ந்தவர்கள் மட்டுமன்றி அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களும் ஆராய்ந்து ஆலோசனைக ளைத் தெரிவிப்பதன் மூலம் இந்தச் சட்டத்தை மேலும் பலப்படுத்துவதுடன், பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும்