செய்திகள்

தகவல் அறியும் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்

தகவல் அறியும் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாக அமைச்சரவைச் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

தகவல் அறிந்துகொள்ளும் சட்டமூலத்தை அவசர பத்திரமாக பிரதமர் ரணில் முன்வைத்தார் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்படி விரைவில் தகவல் அறிந்துகொள்ளும் சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.